
கருணை கரங்கள் நிகழ்வு மேலாண்மை குழு பெருமையுடன் வழங்கும் “மண் வாசனை 26.0”, தமிழர் பாரம்பரியத்தை கொண்டாடும் மிகச் சிறப்பான இசை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இது இசையும் கலாச்சாரமும் கலந்த ஒரு மாபெரும் திருவிழாவாக அமைய உள்ளது.
📅 நிகழ்வு விவரங்கள்:
- நாள்: 15 மார்ச் 2025 (சனிக்கிழமை)
- நேரம்: மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை
- இடம்: Tania Grand Hall, Brickfields, Kuala Lumpur
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
🎤 இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் – பாரம்பரிய தமிழ் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
🎭 நாட்டுப்புறக் கலைகள் – தமிழரின் அடையாளமாக விளங்கும் நாட்டுப்புறக் கலைகளின் கண்காட்சி.
🎁 அதிர்ஷ்ட எழுத்து (Lucky Draw) பரிசுகள் – 30க்கும் மேற்பட்ட பரிசுகள் வெல்லும் வாய்ப்பு.
✈️ பெரும் பரிசு: முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு விமான பயணச்சீட்டு பரிசு வழங்கப்படும்!
👗 சிறந்த உடை (Best Dress) போட்டி – பாரம்பரிய உடை அணிந்த சிறந்த 3 ஆண்களுக்கும் 3 பெண்களுக்கும் பணப் பரிசு!

இந்த நிகழ்வில் தமிழரின் கலாச்சார அடையாளங்களையும், பாரம்பரிய இசையையும் அனுபவிக்க, குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் அழைக்கின்றனர்.
இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்ள 016-997 4757 என்ற எண்ணில் திருமதி ஜான்சி அவர்களுடன் தொடர்புக்கொண்டு பதிவு செய்யவும்.
இது நமது கலாச்சாரத்தை கொண்டாடும் ஒரு அரிய வாய்ப்பு! உங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, “மண் வாசனை 26.0” நிகழ்வை சிறப்பிக்க வாருங்கள்! 🎶✨
-வீரா இளங்கோவன்