Tazhal Media – தழல் மீடியா

/ Jun 08, 2026
Latest News
tms

சபா மாநில வருவாய் 40% குறித்து பேச்சுவார்த்தை தேர்தலால் பாதிப்பு இல்லை என : பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவிப்பு

Picture : Awani

கோலாலம்பூர்: சபா மாநிலத்தின் 40 சதவீத வருவாய் தொடர்பான விவகாரம் குறித்து தொழில்நுட்ப மட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை, வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தல் (PRN) காரணமாக தடைப்படாது என பிரதமர் ‘Datuk’ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது கூறியதாவது, “இப்போதைய அரசு இடைக்கால அரசு என்றாலும், நாங்கள் தாமதிக்க விரும்பவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கும் செயல் நடைமுறையில் உள்ளது,” என்றார். நிதி அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர், சபா மாநிலச் செயலாளருக்கு கடிதம் எழுதி, தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்வர் கூறியதாவது, இந்த பேச்சுவார்த்தை நிதி அமைச்சர், சபா முதல்வர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் இடையே நடைபெறும் என்றும், புதிய அரசு அமைந்த பின் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான நல்லுறவு மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். “நமது கடமை நல்லுறவைப் பேணுவது. எந்த பிரச்சினையும் இருந்தாலும் நிதானமாகவும் மரியாதையாகவும் தீர்க்க வேண்டும்,” என்றார்.

மேலும், மக்களை ஒற்றுமையுடன் இருக்கச் சொல்லி, இனவாத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் என எச்சரித்தார். “இனவாதத்தை ஊக்குவிப்பது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்; இதனால் சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்,” என அன்வர் இப்ராஹிம் கூறினார்.

Scroll to Top