
கோலாலம்பூர், 11 பிப்ரவரி — தைப்பூசத்தை முன்னிட்டு, டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள், முருகப்பெருமானின் அருளால் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி, வாழ்வில் வளமும் செழிப்பும் பெற்று முன்னேற வேண்டும் என அவர் கூறினார்.
பக்தர்கள், மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல், அமைதியாகவும், பக்தி பூர்வமாகவும், முருகனுக்குச் செலுத்த வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என மலேசியா இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் முருகனின் புகழைப் பாராட்டும் ஒரு பழமொழியையும் பகிர்ந்தார்:
“வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, மனமே!”
-வீரா இளங்கோவன்