
Picture:awani
சிலாங்கூர், ஏப்ரல் 4 – புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக, தற்போது பாதிப்பு மதிப்பீட்டு செயல்முறைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இவ்விபத்து ஒரு குழாய்க் கசிவு மற்றும் எரிவாயு வெடிப்பு காரணமாக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததுடன், தற்போது 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பெட்ரோனாஸ் வெளியாக்கப்பட்ட அறிக்கையின் வழி தெரிய வந்தது.
PGB தற்போது சம்பவ இடத்தில் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பரிசோதனைகள் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க புதிய நடைமுறைகள் மற்றும் மேலாண்மை முறைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் எரிவாயு சப்ளை செய்பவர்கள் இடையே கூட்டாண்மை ஏற்படுத்தி பாதுகாப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Petronas Gas, பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து, அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன
-முல்லை மலர் பொன் மலர் சோழன்