Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

இரண்டு அரசாங்க பல்கலைக்கழகங்களில் அறிமுகமாகும் புதிய உயர்நிலை வகுப்பு திட்டம் – ஜூன் 10 முதல் துவக்கம்

Picture: Bernama

கோலாலம்பூர் , மே 26 : மொத்தம் 160 மாணவர்கள், ஜூன் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள புதிய 6ஆம் வகுப்பு (Form Six) கல்வித் திட்டத்தின் முன்னோடிகளாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் ஃபத்லினா சிடிக் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சி திட்டம் Universiti Kebangsaan Malaysia (UKM) மற்றும் Universiti Sains Malaysia (USM) ஆகிய இரண்டு அரசு பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட உள்ளது. UKM-யில் 100 மாணவர்கள், USM-யில் 60 மாணவர்கள் அடங்கும் முதல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

“மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும், சில தகுதிகள் அடிப்படையில் அவர்களை தேர்ந்தெடுக்குவோம். கல்வித் தரத்தை உயர்த்தும் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்று,” என ஃபத்லினா கூறினார்.

மே 19 அன்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு, தேவையான ஆசிரியர்கள் கல்வி அமைச்சால் நியமிக்கப்படுவார்கள் என்றும், தொடக்கத்திலே இரண்டு பல்கலைக்கழகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவசியத்திற்கேற்ப மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ‘வீரர் ஆன்‌டி ரசுவா’ எனும் ஊழலுக்கு எதிரான காமிக்ஸ் தொகுப்பு, Integrity மற்றும் நாட்டுப்பற்றை மாணவர்களிடம் ஊக்குவிக்க பிரதான பங்களிப்பாக இருக்கும் என்றும், DELIMa தளத்தில் இதன் வீடியோக்களும் பகிரப்படும் என தெரிவித்தார்.

இந்த நூல், ஊழலை தடுக்க பள்ளிநிலையிலேயே விழிப்புணர்வை உருவாக்கும் தேசிய எதிர் ஊழல் உத்தி (NACS) 2024-2028 இன் ஒரு முக்கிய அங்கமாகும்.

-யாழினி வீரா

Scroll to Top