Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

Turkiye-யின் உயரிய ‘Order of the Republic’, விருதை பெற்ற டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

Picture : Awani

மலேசியா பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், Turkiye அரசின் உயரிய அரச மரியாதை விருதான ‘(Order of the Republic)’ விருதை பெற்றுள்ளார். இந்த விருது, Turkiye நாட்டுடன் மலேசியா கொண்டுள்ள நட்பு, ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியதற்கான பாராட்டாக வழங்கப்பட்டுள்ளது.

Turkiye குடியரசுத் Presiden Recep Tayyip Erdoğan , தலைமையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில், இந்த உயரிய விருது டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்டது. இது Turkiye வழங்கும் மிக உயர்ந்த அரச மரியாதைகளில் ஒன்றாகும். வெளிநாட்டு தலைவர்களுக்கு, Turkiye நாட்டுடன் சிறப்பான உறவுகளை வளர்த்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது, மலேசியா – Turkiye நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இணைந்து செயல்படுவதற்கு இந்த மரியாதை ஒரு முக்கிய ஊக்கமாக அமையும்.

டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த விருதை மலேசியா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், Turkiye அரசுக்கும் மக்களுக்கும் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

மொத்தத்தில், இந்த உயரிய விருது மலேசியா – துருக்கி உறவுகளில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

Scroll to Top