Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘இறுதி ஸ்ட்ரைக்’ – இயக்குநர் தனேஷ் குமார் எழுதிய உண்மையான மனக் குறிப்பு வைரலாகிறது!

கோலாலம்பூர், அக். 29 – மலேசிய தமிழ் திரைப்படமான “இறுதி ஸ்ட்ரைக் (Irudhi Strike)” திரையிடப்படுவதற்கு முன், அதன் இயக்குநர் டி. தனேஷ் குமார் எழுதிய மனம் தொட்ட ‘உண்மையான குறிப்பு’ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதில், இந்தப் படம் உருவாகும் பயணம் எளிதல்ல எனத் தெரிவித்துள்ள அவர், “இறுதி ஸ்ட்ரைக் 24 முறை திருத்தங்களும், 6 முக்கிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே இறுதி வடிவை அடைந்தது. ஆனால் நம்பிக்கையும் படத்தின் ஆன்மாவும் ஒருபோதும் தொலைக்கப்படவில்லை,” என உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

“நான் யாரையும் படம் பார்க்க வற்புறுத்த மாட்டேன். ஆனால் சினிமா உங்கள் மனதை தொட முடியும், உங்களைக் கவலைப்பட வைக்கும், சிந்திக்க வைக்கும் என்று நீங்கள் நம்பினால் — இந்தப் படத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்,” எனவும் அவர் எழுதியுள்ளார்.

மேலும், படம் பார்த்தபின் யாரேனும் அது மதிப்பில்லையென்று உணர்ந்தால், மூன்று நாட்களுக்குள் டிக்கெட் தொகையைத் திருப்பித் தருவேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “30, 31 அக். மற்றும் 1 நவம்பர் ஆகிய மூன்று நாட்களே படத்திற்கான முக்கியமானவை. பார்வையாளர்கள் ஆதரவு குறைந்தால் படம் நீக்கப்படும் அபாயம் உண்டு. ஆனால் ஒவ்வொரு டிக்கெட்டும் ஒரு ஆதரவின் சின்னம், புதிய தலைமுறை கலைஞர்களுக்கான நம்பிக்கையின் வெளிச்சம்.”

“இறுதி ஸ்ட்ரைக் இப்போது உங்களுடையது — திறந்த மனதுடன் பாருங்கள்,” என்று இயக்குநர் டி. தனேஷ் குமார் தனது குறிப்பை முடித்துள்ளார்.

-யாழினி வீரா

Scroll to Top