
படம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா
சென்னை, 2 ஜனவரி – சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது ‘மை லார்ட்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. முதலில் சசிகுமார் காட்சிகளின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
-ஶ்ரீஷா கங்காதரன்