
பிரபல யூடியூபர் விஜே சித்து தனது நண்பர்களுடன் 90ஸ் கிட்ஸ் விளையாட்டுகள் பற்றிய வீடியோவை 7ஆம் தேதி பதிவிட்டிருந்தார். இதில், “நிக்கல் – குந்தல்” என்ற விளையாட்டை விளையாட முடிவு செய்து, நண்பர்கள் ஒருவருக்கொருவர் மாறிமாறி அடித்துக்கொள்வதை காணக்கூடியது.
விளையாட்டின் ஒரு கட்டத்தில், ஒருவர் “குந்தல்” எனச் சொல்லாமல் உட்கார்ந்துவிட்டார் எனக் கூறி, விஜே சித்து அவரை சரமாரியாக அடிக்கிறார். அந்த நபர் சிரித்துக்கொண்டே அடிகளை பெற்றிருந்தாலும், இதைக் கண்ட பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பலர் “இது காமெடியின் பெயரில் துன்புறுத்தல்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், விஜே சித்து எல்லை மீறியுள்ளார் என சிலர் குற்றம்சாட்ட, அவருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வீடியோவுக்கு எதிரான விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், ஏச்சு பேச்சுகள் அதிகரித்ததை தொடர்ந்து, விஜே சித்து பதற்றம் அடைந்துள்ளார். இதனால், சர்ச்சைக்குரிய பகுதியை மட்டும் யூடியூப் வீடியோவிலிருந்து நீக்கியுள்ளார்.
தற்போது, இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.