
லஹாட் டத்து, 22 ஜனவரி — லஹாட் டத்து மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தே தியான் யா மரணத்தில் பகடிவதை மற்றும் தவறான நடத்தைக்கு எந்த அடிப்படையும் இல்லாமல் முடிவெடுத்துள்ளது விசாரணை குழு.
இவ்வாறான முடிவுகளை வெளியிட்ட விசாரணை குழுத் தலைவர் தான்ஸ்ரீ போர்ஹான் டொல்லா, குற்றச்சாட்டுகளின் பிரகாரம் நான்கு முக்கிய அம்சங்களை ஆராய்ந்தது. இதில், அதிக வேலைச்சுமை, பணியிட உறவுகள், மேலாளர் நடத்தை, மற்றும் சபாவைத் தவிர மற்ற இடத்திற்கு மாற்றம் வேண்டியிருப்பது என விவாதிக்கப்பட்டது. “பகடிவதை மற்றும் தவறான நடத்தையின் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல.,” என்று அவர் கூறினார்.
விசாரணையில் 19 சாட்சிகள் நேர்காணல் செய்யப்பட்டனர், அதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அடங்கினர். விசாரணைக் குழு உறுப்பினர்கள் டாக்டர் தே தியான் யா வாடகை வீட்டையும் பரிசோதித்தனர்.
சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் துல்கெப்லி அகமத், இந்த விசாரணை முடிவுகளை டாக்டர் தே தியான் யா குடும்பத்திற்கு அறிவித்துள்ளதாக கூறினார். “முடிவுகள் வெளியிடப்பட்டபோது குடும்பத்திற்கு ஏற்படும் உணர்ச்சி சுமையை நான் புரிகிறேன்,” என்ற அவர், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
டாக்டர் தே தியான் யா, கடந்த ஆகஸ்ட் 29 அன்று தன்னுடைய வாடகை வீட்டில் இறந்துபோனார். அவரின் குடும்பம் மற்றும் அவருடைய புலனம் பேச்சு வழிகளில், அவரது வேலைச்சுமை மற்றும் நடத்தையை பற்றிய சான்றுகள் கண்டறியப்பட்டன.
– வீரா இளங்கோவன்