
புத்ராஜெயா, 23 பிப்ரவரி — முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோக ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
விரிவான தகவலின்படி, அவர்கள் வெள்ளிக்கிழமை (பிப். 21) புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு, விளக்க மறியல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மஜிஸ்திரேட் இட்ஷா சூலைக்கா அவர்களால் மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மூன்று அதிகாரிகள் பிப்ரவரி 25 (செவ்வாய்கிழமை) வரை ஐந்து நாட்கள் விளக்க மறியலில் இருக்க, மற்றொரு அதிகாரி மூன்று நாட்கள் மட்டுமே (பிப். 23, ஞாயிறு) தடுத்து வைத்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ ஆசாம் பகி, இந்த விவகாரம் MACC சட்டத்தின் பிரிவு 16(a)ன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக உறுதி செய்தார்.
“விசாரணை நடைபெறும் நிலையில் எந்தவித ஊகங்கள் எழாமல், பொதுமக்கள் எங்களுக்கான தேடலுக்கான இடத்தை வழங்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-யாழினி வீரா