
கோலாலம்பூர், ஏப்ரல் 14: மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமட் பதாவி இன்று 85வது வயதில் காலமானார். இச்செய்தியை அவரது மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுத்தீன் சமூக ஊடகத்தில் உறுதிப்படுத்தினார்.
துன் மகாதீர் முகமதுக்குப் பிறகு 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற அப்துல்லா பதாவி, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். அவரது இடத்தை நஜிப் ரசாக் தாங்கினார்.
அப்துல்லா பதாவி, அம்னோவின் 6வது தலைவர் எனும் பதவியையும் வகித்தவர். அவர் நாட்டிற்காக செய்த பணிகளுக்காக “துன்” பட்டம் வழங்கப்பட்டது.
அவருக்கு துணைவியார் துன் ஜீன் அப்துல்லா மற்றும் இரு பிள்ளைகள் – கமாலுதீன் மற்றும் நோரி உள்ளனர்.
மரியாதைக்குரிய அரசியல்வாதியாக, அவர் நான்குக்கும் மேற்பட்ட தசாப்தங்களுக்கு மேலான அரசியல் சேவையில் ஈடுபட்டார். மதநடைமுறை மற்றும் ஊழல்தடுப்பு சீர்திருத்தங்களை முன்னோக்கி இழுத்தவர்தான் துன் அப்துல்லா அகமட் பதாவி என்பது குறிப்பிடத்தக்கது.
-வீரா இளங்கோவன்