
Picture : Awani
கோலாலம்பூர், அக்டோபர் 8 — முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MITI) பெண்களை வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் முன்னேற்றுவதற்கான சில முக்கிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டுள்ளது. இதில் நிதி ஆதரவு மற்றும் வளங்களுக்கான அணுகல் முக்கியமாகும் என்று ‘Minister Tengku Datuk Seri Zafrul Abdul Aziz ‘ தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, பெண்கள் தொழில்முனைவோருக்கு கடன், வர்த்தக நிதி, முதலீட்டு நிதி மற்றும் பசுமை நிதி ஆகியவற்றில் எளிதில் அணுகல் கிடைக்க வேண்டும். மேலும், டிஜிட்டல் அதிகாரமளித்தல், நிலைத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல், அதேபோல் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.
“டிஜிட்டல் அதிகாரமளித்தல் மூலம் பெண்கள் e-commerce, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் திறனை வளர்த்துக்கொள்ளலாம்,” என்று அவர் ‘Unleashing the Power of Women in ASEAN’ என்ற மன்றத்தில் உரையாற்றியபோது கூறினார்.
மேலும், நிலைத்தன்மை (sustainability) மூலம் பெண்கள் வழிநடத்தும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கொள்கைகளுடன் (ESG) இணைந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் வாய்ப்புகளைப் பெறலாம் என கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தார், மலேசியாவில் பெண்கள் மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும், தொழில்முனைவோரில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளனர். இதனால் பெண்கள் தொழில்முனைவோருக்கான ஆதரவு, புதிய தொழில் மாஸ்டர் திட்டம் 2030 (NIMP 2030) மற்றும் தேசிய வர்த்தக வரைமுறைத் திட்டம் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில், 2 இலட்சம் 19 ஆயிரம் பெண்கள் நடத்தும் நிறுவனங்கள் மலேசியாவின் மொத்த உற்பத்தியில் RM137 பில்லியன் பங்களித்துள்ளன.
தென்கிழக்காசிய (ASEAN) பிராந்தியத்திலும் பெண்கள் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.



