Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

கமல் ஹாசன் – சினிமாவின் சிகரம், வாழ்க்கையின் பாடம் – டத்தோ டி. மோகன்

கோலாலம்பூர், 7 நவ. – உலகத் தமிழ்ச் சினிமாவின் பெருமையாக விளங்கும் நடிகர் கமல் ஹாசனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் தத்துக் டி. மோகன் தனது ஃபேஸ்புக் பதிவில் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது, “ஐந்தாவது வயதில் கேமரா முன் நிற்கத் தொடங்கிய கமல் ஹாசன், 6வது வயதில் கலத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அப்போது தொடங்கிய அவரின் பயணம் இன்று வரை அதிசயத்தால் நிரம்பியது” என தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் நடிகராக மட்டுமின்றி, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் என பல்வேறு துறைகளில் தன்னை நிரூபித்திருப்பதாகவும், அவரின் உழைப்பு மற்றும் ஆர்வம் தான் அவரது நிலைத்திருப்புக்கான காரணம் என்றும் மோகன் வலியுறுத்தினார்.

அவரை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “அவரின் தாழ்மையும் அறிவும் சினிமாவை நேசிக்கும் உள்ளத்தும் எனக்கு பெரும் ஊக்கமாக இருந்தது,” என்றார்.

மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவில் 90 நாட்கள் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி எடுத்த கமல் ஹாசனின் “எப்போதும் கற்றுக்கொள்வோம்” என்ற மனப்பாங்கு தான் இளைய தலைமுறைக்கு உண்மையான பாடம் என அவர் குறிப்பிட்டார்.

“கமல் ஹாசனின் வாழ்க்கை வெற்றிக்கான பாதை மட்டுமல்ல, மேன்மைக்கான சின்னம்,” என்று தத்துக் டி. மோகன் தனது வாழ்த்தில் கூறினார்.

-யாழினி வீரா

Scroll to Top