Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

புக்கிட் மிஞாக் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ரசாயன கழிவுகளுக்குப் பின்னால் தொழிற்சாலை தொடர்பா? – சுற்றுச்சூழல் துறை மற்றும் IWK விசாரணை

படம்:ஊடகம்

ஜார்ஜ் டவுன், 11 ஜூன்: புக்கிட் மிஞாக் தொழிற்துறை பகுதியில் ஜூன் 6ஆம் தேதி நடந்த கழிவுநீர் குழாய் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ரசாயன கழிவுகளைக் கண்டறிய சுற்றுச்சூழல் துறை (DOE) மற்றும் இண்டா வாட்டர் கன்சோர்சியம் (IWK) இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறை இயக்குநர் நோர் அஸிசி அடினான் கூறியதாவது, “முதல் நிலை ஆய்வில், இது தொழிற்துறை கழிவு என நம்பப்படும் வண்ணமுள்ள திரவம், சட்டவிரோதமாக கழிவுநீர் குழாயில் கழிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது,” என்றார்.

ஆயினும், எடுத்த மாதிரிகள் மிகுந்த நீர்சேர்க்கையால் பளிச்சென்று இருக்கும் காரணமாக, அதன் இரசாயன அமைப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

“புக்கிட் மிஞாக் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால், இந்த வழக்கு சிக்கலானதாக உள்ளது. ஆனாலும் தொழிற்சாலையை கண்டறிய இராசாயண கைரேகை சோதனை அடிப்படையில் தேடல் செய்யப்படுகின்றது,” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, IWK-இன் விசாரணையில், அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு திரவம் கழிவுநீர் குழாய்களில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன.

-யாழினி வீரா

Scroll to Top