
படம் : டெய்லி தந்தி
சென்னை, 10மார்ச்- கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா, சமந்தா, சைதன்யா உட்பட பலர் நடித்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மலர்ந்த இப்படம், 2010-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இப்படம் குறித்த நினைவுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டதோடு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் செய்துள்ளனர்.
சிலம்பரசன், “விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் , திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்” என கூறியுள்ளார்.
மேலும், சோனி மியூசிக் நிறுவனம் இந்தக் கொண்டாட்டத்திற்கு lovefullyvtv.com என்ற ஒரு சிறப்பு இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைக் கொன்டாடும் வகையில் பலர் இணையம் வழியாக பாடலையும், குறிப்பிட்ட காட்சிகளையும் ரே-கிரியேட் செய்து தங்களது சமூக வளைதளங்களில் பதிவேற்றியும் வந்தனர்.
-ஶ்ரீஷா கங்காதரன்