
மலேசிய திரைப்பட துறையில் தரமான படைப்புகளை உருவாக்கும் முயற்சியில், வீடு புரொடக்ஷன் தயாரித்த தமிழ் ஸ்கூல் பசங்க திரைப்படம், ஜனவரி 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. டெனிஸ் குமார் மற்றும் டி.எஸ். டாக்டர் விமலா பெருமாள் தயாரிப்பில், ஷான் இயக்கியுள்ள இந்த படத்தில், டெனிஸ் குமார், குபேன் மகாதேவன், வித்தியா, பென் ஜி, யாஸ்மின் நடியா, வீரசிங்கம், மலர்விழி ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ்ப்பள்ளிகள் மற்றும் அதன் மாணவர்களின் குறைவடைந்த எண்ணிக்கையை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் உருவான இப்படம், பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டுச் செல்லும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, நட்பு, நகைச்சுவை மற்றும் பள்ளிப் பருவத்தின் இனிமையை மனதில் நிறுத்தும் வகையில் அனைத்து வயதினருக்கும் பொருத்தமானதாக தயாரிக்கபட்டிருக்கும் இத்திரைப்படத்தை குடும்பத்தோடு திரையங்கில் கண்டு ரசிக்க திரைப்பட குழுவினர் அழைகின்றனர்.
சமூக சிந்தனையும் உணர்வுகளும் கலந்த இப்படம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சமர்ப்பணமாக அமையும். மேலும் கதை முக்கியத்துவம், உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு, சிரிப்பு, கண்ணீர் என பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.
தற்பொழுது தமிழ் ஸ்கூல் பசங்க திரைப்பட குழுவினர் நாடு முழுவதும் விளம்பரத்திற்காக பயணம் செய்துவருகின்றனர்.