Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘Mahkamah’ ரயுவான் ரொஸ்மாவுக்கு மூன்று மாதங்களுக்கு பாஸ்போர்ட் வைத்திருக்க அனுமதி அளித்தது

Picture : Awani

மலேசியா முன்னாள் பிரதமர் ‘Datuk Seri Najib Razak’ அவர்களின் மனைவி Datin Seri Rosmah Mansor , தற்போது நீதிமன்ற வழக்கில் இருப்பவர். அவர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் திரும்ப வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதனைப் பற்றிய தீர்ப்பு சமீபத்தில் ‘Mahkamah Rayuan (Court of Appeal)’ வழங்கியது.

நீதிமன்றம் ரொஸ்மாவுக்கு அவரது பாஸ்போர்ட்டை மூன்று மாதங்களுக்கு வைத்திருக்க அனுமதி அளித்துள்ளது. இந்த காலத்தில் அவர் வெளிநாடு செல்லலாம். ஆனால் அவர் திரும்பி வந்தவுடன் பாஸ்போர்ட்டை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ரொஸ்மா தனது கோரிக்கையில் கூறியதாவது, தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று. வழக்கறிஞர்கள் இதை விளக்கினர். அரசு தரப்பும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால் நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

அவர் தற்போது சோலார் சக்தி திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் தண்டனைக்கு முறையிட்டுள்ளார். இந்த வழக்கின் மேல்முறையீடு இன்னும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.

‘Mahkamah Rayuan‘ தெரிவித்தது, இந்த அனுமதி ஒரு சிறப்பு சூழ்நிலைக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எந்த வித மீறலும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த தீர்ப்பு, ரொஸ்மாவுக்கு சிறிய நிம்மதியை அளித்தாலும், அவரது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் தொடர்கிறது.

Scroll to Top