Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புதிய தலைமையாசிரியராக நளினி ஜெயராமன் நியமனம்

கம்பார், நவம்பர் 3 – SJKT லாடாங் கம்பார் தமிழ்ப்பள்ளி தற்போது புதிய தலைமையாசிரியர் திருமதி நளினி த/பெ ஜெயராமன் அவர்களை வரவேற்றுள்ளது. அவரின் வரவு, பள்ளி சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. அனைவரும் அவரை அன்புடன் வரவேற்று, நல்வரவு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமதி நளினி ஜெயராமன் தன்னம்பிக்கை மிகுந்த, துடிப்புமிக்க மற்றும் திறமையான ஆசிரியர். பல ஆண்டுகள் கல்வி துறையில் பணியாற்றி, மாணவர்களின் அறிவும் திறமையும் வளர்க்கும் பணிகளில் முன்னணி வகித்தவர். இப்போது பள்ளியின் தலைமைப் பொறுப்பில் நுழைந்த அவர், பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்தி, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருடன் இணைந்து பணியாற்ற உற்சாகமாக உள்ளனர். தலைமையாசிரியர் அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் உதவியுடன், SJKT லாடாங் கம்பார் தமிழ் பள்ளி மேலும் சிறப்பான அடைவுகளை அடைவது உறுதி என அனைவரும் நம்பிக்கை கொள்கின்றனர்.

பள்ளி சமூகத்துக்கான அவரின் வருகை, மாணவர்கள் வளர்ச்சிக்கும், கல்வி தரமும் மேம்படும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தலைமையாசிரியர் திருமதி நளினி ஜெயராமனுக்கு இனிய வரவேற்பும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டு, அவரின் பயணம் பள்ளி வளர்ச்சிக்காக தொடங்கியுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top