Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மாலை விருந்து: தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா – வைஷாலிக்கு அழைப்பு

படம்:கூகுள்

ஜனவரி 25-குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்களில் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்று மாலை நடைபெறும் விருந்தில் பங்கேற்க, தமிழக ‘கிராண்ட் மாஸ்டர்’ சகோதர, சகோதரியான பிரக்ஞானந்தா – வைஷாலிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள கடமை பாதையில், பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க, நாடு முழுவதும் இருந்து பொதுமக்களில் 10 ஆயிரம் பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் சகோதரர்களான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா – வைஷாலி ஆகியோர் இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல மருத்துவர்கள், அரசுசாரா தொண்டு நிறுவன நிர்வாகிகள், விருது பெற்ற விவசாயிகள் உள்ளிட்டோருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top