Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

வீரா இளங்கோவனுக்கு தாய்த்தமிழ் அகாடமி வழங்கிய “தொழில்நுட்பச் சுடர்” விருது

படம்:ஊடகம்

கோலாலம்பூர், 23 செப். – எல்.இ.டி காட்சித்திரையில் தனித்துவமான சாதனைகள் நிகழ்த்தி வரும் வீரா இளங்கோவன் அண்மையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தாய்த்தமிழ் அகாடமி சார்பில் “தொழில்நுட்பச் சுடர்” விருதை பெற்றார்.

இந்த விருதை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் அவர்கள் வழங்கினார்.

அவரை பரிந்துரை செய்த நாடறிந்த கலைஞர் இசையமைப்பாளர் டாக்டர் எஸ்.பி. புருஷோத்தமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை மலர்களோடு சமர்ப்பித்தார்.

இந்த விருது, வீரா இளங்கோவனின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மலேசியா எல்.இ.டி துறையில் சாதனைகளுக்கும் முக்கிய அங்கமாகும். இளம் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், கலை மற்றும் தொழில்நுட்ப துறையில் முயற்சி செய்யும் அனைவருக்கும் ஊக்கம் தரும் என்று அவர் தெரிவித்தார்.

-யாழினி வீரா

Scroll to Top