Tazhal Media – தழல் மீடியா

/ May 02, 2025
Latest News
tms

தையல் நாயகி விருது விழா 2025

Picture: Veera

கோலாலம்பூர், மே 2- தையல் தொழிலில் பெருமைசேர்த்துக் கொண்டிருக்கும் மலேசிய இந்திய பெண்கள் சமூகத்தின்மேல் வைத்துள்ள தாக்கம் நாளடைவில் கணிசமாக உயர்ந்துள்ளது.

அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் எஸ்.பி. சரா கேக்ஸ் & டைலரிங் மற்றும் விமர்சகன் ஊடகம் “தையல் நாயகி விருது விழா 2025” என்ற தலைப்பில் சிறப்பு விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விருது விழாவுக்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த விருது விழா, தையல் துறையில் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் அவர்களின் பங்கு, தன்னம்பிக்கை, தொழில் முயற்சி ஆகியவற்றையும் வலியுறுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

மேலும், இவ்விழா மற்ற பெண்களுக்கு சிறந்த ஊக்கமாக அமையும் என்பதையும் ஏற்பாட்டாளரான திரு. எஸ். பி. சரவணன் தெரிவித்தார்.

இது வெறும் விருது விழா அல்ல. தையல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களை ஒரே நேரத்தில் தொழிலாளராகவும், குடும்பத்தலைவியாகவும், சமூக சேவகராகவும் நிரூபிக்கிறார்கள்.

அவர்களின் பயணத்தை கௌரவிக்க வேண்டிய நேரம் இது என்பதனையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் மூலமாக, குறைந்த வருமானத்துடன் தங்கள் வாழ்வை நிர்வகித்து வரும் தையல் பெண்களுக்கு பெரிய மேடை அமைக்கப்படும்.

இது அவர்களின் திறமையை பெருமையாகக் கொண்டாடி, மேலும் பல பெண்களை இந்த துறையில் நுழைய ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

முதல்முறையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழாவில் 32 பேர் விருது பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் நாடுமுழுவதிலிருந்து சிறப்பு தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருது விழா எதிர்வரும் மே, 11ஆம் தேதி, கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள விஸ்மா வாய்.எஸ்.எம்மில் (YSM) நடைபெறவுள்ளது.

“தையல் நாயகி” என்பது ஒரு பெயர் மட்டும் அல்ல; அது ஒரு பெண்ணின் உழைப்பையும், விடாமுயற்சியையும், சமூகத்திற்கான பங்களிப்பையும் எடுத்துச் சொல்லும் முத்திரை ஆகும்.”

-வீரா இளங்கோவன்

Scroll to Top