
கெப்பாலா பாத்தாஸ், 9 ஏப்ரல்: ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டத்தில் நம்பி பணம் செலுத்திய 58 வயதான சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர், மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்டு, 12 இலட்சம் ரிங்கிட் இழந்தார்.
செபெராங் பிராய் உத்தாரா மாவட்டக் காவல் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததின்படி, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி காலை 10 மணியளவில், பாதிக்கப்பட்டவர் பங்குச்சந்தை முதலீட்டுக்கான விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் பார்த்துள்ளார். அதன் மூலம் முதலீட்டில் 500% முதல் 800% வரையிலான லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
இதில் நம்பிக்கை கொண்டு, அவர் ஏழு மாறுபட்ட வங்கிக் கணக்குகளில் மொத்தமாக RM1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதைக் உணர்ந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் கலந்து கொள்வது மிகுந்த ஆபத்துள்ளதாகவும், நிபுணர் ஆலோசனை இல்லாமல் பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-யாழினி வீரா