
குவாந்தான், 15 பிப்ரவரி — தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே கடந்த வியாழக்கிழமை ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் உணவு வியாபாரியின் கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
53 வயதான அந்த நபர், இன்று காலை 5.30 மணியளவில் கோல திரங்கானுவில் உள்ள வகாஃப் தெம்புசு கோங் பாடாக் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 கீழ் விசாரணை தொடரும் நோக்கில், வேலையில்லாத அந்த நபரை காவலில் வைக்க இன்று குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைக்கு உதவ ஒரு மோதிரம், பணம், உடைகள் மற்றும் ஆவணங்கள் அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
கொலையின் பின்னணி
📌 37 வயதான நோர்ஷமிரா ஜைனல், உணவு வியாபாரியாக இருந்தார்.
📌 கடந்த பிப்ரவரி 13 அன்று தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
📌 காயங்களின் தடங்கள் மற்றும் நகைகள் காணாமல் போனது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சந்தேக நபரை கைது செய்ய உதவிய திரங்கானு போலீசாருக்கு பகாங் காவல்துறை தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் நன்றி தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்