
மால்தீவுகள், 3 நவ. – உலகளவில் முதல் முறையாக, மால்தீவுகள் அரசு 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தோருக்குப் புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இத்திட்டம் அடுத்த தலைமுறையை புகையிலைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுவிக்க நோக்கமாக கொண்டது.
புதிய சட்டத்தின் படி, 2025 நவம்பர் 1 முதல் 2007 அல்லது அதற்குப் பிறகு பிறந்த யாரும் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் முடியாது. இந்த முயற்சி நாட்டின் சுகாதார தரத்தை மேம்படுத்தவும், புகையிலை காரணமாக ஏற்படும் நோய்களைக் குறைக்கவும் உருவாக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
மால்தீவுகள் சுகாதார அமைச்சு, புகையிலை விட்டுவிட விரும்புபவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என கூறியுள்ளது. மேலும், இளம் தலைமுறையை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் தள்ளும் நோக்கத்துடன் கல்வி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தொடங்கப்பட உள்ளன.
இந்தத் தீர்மானம் உலக நாடுகளில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புகையிலையற்ற தலைமுறை உருவாக்கும் முயற்சியாக இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.



