Tazhal Media – தழல் மீடியா

/ Jun 08, 2026
Latest News
tms

அமைச்சரவையில் மாற்றங்கள் தேவையில்லை – பிரதமர்

Picture: veera

கோலாலம்பூர், ஜூன் 1: பொருளாதார அமைச்சர் ரஃபிசி ராம்லி மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமட் ஆகியோர் கடந்த மே 28ஆம் தேதி தங்களது பதவிகளில் இருந்து விலகியிருந்த போதும், உடனடி அமைச்சரவை மாற்றம் செய்ய தேவையில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அனுவார் இப்ராஹிம் தெரிவித்தார்.

2025 புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்நுவர், “அவர்கள் எடுத்த முடிவை சுயவிமர்சனம் செய்யும் வாய்ப்பு அளிக்க வேண்டியுள்ளது. தற்போது அவர்கள் விடுமுறையில் உள்ளனர், அதற்கு நான் அனுமதி வழங்கியுள்ளேன்,” என்றார்.

அரசியல் நிலை தற்போது சீராகவே நடைபெற்று வருவதாகவும், எந்தவிதமான தடங்கலும் இல்லை என்றும் அவர் கூறினார். அடுத்த அமைச்சரவை கூட்டத்தில், தற்காலிக பொறுப்புகளை ஏற்க அமைச்சர்களிடம் அவர் கோருவதாகவும், ஒவ்வொரு அமைச்சின் தலைமை இயக்குநரும் துறை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, ASEAN, ஜிசிசி, சீனா மற்றும் அமெரிக்காவுடன் நடைபெறும் முக்கியமான வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் நிமித்தமாக அரசு நிலைமை திடமாக இருக்க வேண்டும் எனவும் அனுவார் வலியுறுத்தினார்.

-யாழினி வீரா

Scroll to Top