
பகாங், 3 நவ. – கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன் குடும்பத்தின் மரபு நிலத்தை மீட்டெடுக்க 94 வயது மதிக்கத்தக்க சாந்திராமதி அதைக்கண் என்கிற பாட்டி நீதிக்காக போராடி வருகிறார். இது செல்வத்திற்கான போராட்டம் அல்ல – மரியாதைக்கானது.
1973 ஆம் ஆண்டில் ராவுப் (Raub) பகுதியில் உள்ள வெறும் 0.6 ஏக்கர் (26,136 சதுர அடி) ancestral நிலம், நிலம் கைப்பற்றும் சட்டத்தின் கீழ் (Land Acquisition Act) அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. 1911ஆம் ஆண்டு அவரது தாத்தாவால் வாங்கப்பட்ட இந்த நிலம், 1970ஆம் ஆண்டு அவரது சகோதரர் அன்பு நினைவாக சாந்திராமதிக்கு அளித்தது. எனினும் அதிகாரிகள் அந்த ஆவணத்தை “செல்லாதது” என அறிவித்தனர்.
அதன் பிறகு சாந்திராமதி பாட்டி 50 ஆண்டுகளாக நீதிமன்றத்திலிருந்து நீதிமன்றம் சென்று போராடி வருகிறார். வழக்குச் செலவுகளைச் சமாளிக்க தன்னுடைய மீதமுள்ள நிலங்களையும் விற்றுவிட்டார். தனது இளமை, ஆரோக்கியம், ஆண்டுகள் அனைத்தையும் நீதிக்கான தேடலில் செலவழித்துள்ளார்.
இது ஒரே ஒரு பெண்ணின் கதை அல்ல — இது ஒவ்வொரு மலேசியரின் குரலும், மரபு நிலத்தை இழந்த குடும்பங்களின் வலியும். பழைய சட்டங்களின் அநீதி இன்னும் உயிருடன் இருப்பதை இது நினைவூட்டுகிறது.
ஆறு ஆண்டுகால மறுவிசாரணைக்கு பின், தெமர்லோ உயர் நீதிமன்றம் இந்த வழக்குக்கான இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது.
🗓 தேதி: 21 நவம்பர் 2025 (வியாழன்)
🕘 நேரம்: காலை 9.00 மணி
🏛 இடம்: தெமர்லோ உயர் நீதிமன்றம், பகாங்
மலேசியாவின் அனைத்து குடிமக்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் நீதிக்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
நீதிக்காக நிற்போம். உண்மைக்காக நிற்போம். மலேசியாவுக்காக நிற்போம்.



