Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பேராக் வெள்ள நிலவரம்: 2,000 க்கும் மேற்பட்டோர் இடமாற்றம்!

படம்: பெர்னாமா

ஈப்போ, 24 அக். –
பேராக் மாநிலத்தில் கடந்த இரு நாளாக தொடர்ந்து பெய்த கனமழையின் விளைவாக, பல பகுதிகளில் வெள்ளநிலை கடுமையாகியுள்ளது. இதனால் 759 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,171 பேர் 22 தற்காலிக இடமாற்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லருட்-மடாங்-ஸெலமா (LMS) மாவட்டத்தில் மட்டும் 19 மையங்களில் 1,784 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்ஜுங் மாவட்டத்தில் 3 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன, அங்கு 387 பேர் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், Sungai Kampar, Sungai Slim மற்றும் Kolam Bukit Merah போன்ற நதிகளில் நீர்மட்டம் அபாய அளவுக்கு உயர்ந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சில சாலைகள் மூடப்பட்டுள்ளன மற்றும் சில கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.

மலேசியா வானிலைத் துறை தெரிவித்ததாவது, LMS, கேரியான், மன்ஜுங், பேராக் தெங்கா, பாகான் தத்துக் மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மழை மற்றும் மின்னல் தொடர வாய்ப்பு உள்ளதாகும்.

மாநில பேரிடர் மேலாண்மை குழு (JPBN) பொதுமக்களுக்கு வெள்ளம் பாதித்த பகுதிகளைத் தவிர்க்குமாறும், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் அருகிலுள்ள இடமாற்ற மையங்களுக்கு உடனடியாக செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

– யாழினி வீரா

Scroll to Top