
படம் : கூகுள்
இந்தியா, 16 பிப்ரவரி- நாக் அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆலியா பட் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு 2026-ம் ஆண்டில் தான் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின். இப்படத்தில் நடிப்பதற்காக பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அது முழுமையாக நாயகியை மையப்படுத்திய கதையாகும். தற்போது அக்கதையில் ஆலியா பட் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள்.
தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் ‘லவ் அண்ட் வார்’ படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கவுஷலுடன் நடித்து வருகிறார் ஆலியா பட். இப்படப்பிடிப்பு அக்டோபர் மாதம் வரை நடைபெறும் என தெரிகிறது. பிறகு நாக் அஸ்வின் படத்தினை தொடங்க முடிவு செய்திருக்கிறார் ஆலியா பட். நவம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
ஆலியா பட் படத்தினை முடித்துவிட்டு, 2026-ம் ஆண்டு கோடை விடுமுறையில் தான் ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார் நாக் அஸ்வின். இதற்கு தகுந்தாற் போல் நடிகர்களின் தேதிகளுக்காக பேசி வருகிறது படக்குழு.
-ஶ்ரீஷா கங்காதரன்