Tazhal Media – தழல் மீடியா

/ Apr 29, 2025
Latest News
tms

கே.வி.டி கோல்டு & டைமண்ட்ஸ்-இன் 3வது கிளை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் பிரமாண்ட திறப்புவிழா.

கே.வி.டி கோல்டு & டைமண்ட்ஸ்-இன் 3வது கிளையான கே.வி.டி. தங்கமாளிகை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மாபெரும் திறப்புவிழா கண்டது. இத்திறப்பு விழாவில் ம.இ.கா. தேசியத் தலைவர் மதிப்பிற்குரிய தான் ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா. தேசியத் துணைத்தலைவருமான  டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலரும் தலைவருமான தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா, கார சாரம் உணவங்கங்களின் உரிமையாளர் திரு. ஸ்ரீதரன் ஆகியோர் சிறப்பு வருகையாளராக கலந்துச் சிறப்பித்தனர். நகை வியாபாரிகள் வர்த்தகர்கள் நண்பர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வந்திருந்த அனைவருக்கும் பரிசு பொருட்களும் உணவுகளும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் அதன் உரிமையாளர் திரு தங்கதுரை KVT Gold & Diamond  தங்க மாளிகை 3-வது கிளை நிறுவனம் இன்று திறப்பு விழா கண்டது ,Kuala Lumpur brickfields Little India Sentral Suit கீழ் தளத்தில்.

– Rithya Rebecca Ramani –

Scroll to Top