
கோலாலம்பூர், 5 மார்ச் — இந்து மத நிகழ்வை இழிவுபடுத்தியதாக பரவிய காணொளி விவகாரத்தில், ஏரா FM வானொலி அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு பேர் இன்று (மார்ச் 5) புகார்க் அமான் குற்றப்புலனாய்வு (USJT) சிறப்பு விசாரணை பிரிவில் விளக்கம் அளிக்க உள்ளனர் என்று மலேசிய காவல் துறை தலைவர் (IGP) தான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் மூன்று அறிவிப்பாளர்களுடன், ஆஸ்ட்ரோ ஆடியோ இயக்குநர், ஒரு சமூக ஊடக நிர்வாகி மற்றும் வானொலி நிலைய மேலாளர் ஆகியோர் உள்ளனர். இதுவரை 44 போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாக IGP கூறினார்.
விவகாரத்திற்குரிய வீடியோ தற்போது நீக்கப்பட்டதாகவும், 95,400 பேர் பார்த்து, 204 பேர் பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் 298 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மைக்ரோமல்டிமீடியா சட்டம் (CMA) பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஒரு வருட சிறை தண்டனை அல்லது RM50,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம்.
அறிவிப்பாளர்கள் ஏரா FM-ன் முகநூல் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளனர் என்று காவல் துறை தெரிவித்தது.
-வீரா இளங்கோவன்