
படம் : கூகுள்
கோலாலம்பூர், 13 பிப்ரவரி- மாணவர் இடைநிற்றல் விவகாரத்தைக் களைவதற்கு ஏற்ற செயல்திறனை மேம்படுத்த கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்படும். கல்வியைப் பாதியில் கைவிடும் அபாயம் உள்ள மாணவர்கள், கல்வியைக் கைவிட்ட மாணவர்கள், மற்றும் கல்வி அணுகல் கிடைக்காத சிறார்கள் ஆகியோரைப் பள்ளி தரப்பினர் முன் கூட்டியே கண்டறிய இந்த செயல்முறை உதவும் என்று கல்வி துணை அமைச்சர் கூறினார். இச்செயல்முறை தொடக்கக் கட்டத்தில் கவனம் செலுத்தி, தலையீட்டை மேற்கொள்ளும் எனவும் கல்வி துணை அமைச்சர் கூறினார்.
மக்களவையில் இப்பிரச்சனைக்கான சிக்கல்களைத் தீர்க்க அமைச்சு மேற்கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து ஷா ஆலம் நாடாளுமன்ற உருப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ பதிலளித்தார்.
-ஶ்ரீஷா கங்காதரன்