
சுபாங் ஜாயா, 1 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் இன்று காலை ஏற்பட்ட எரிபொருள் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு காப்புறுதி நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
Takaful Malaysia தனது ஃபேஸ்புக் பதிவில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. “இந்த கடினமான நேரத்தில், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுங்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் உதவி கிடைக்கும்,” என அந்த நிறுவனம் தெரிவித்தது.
மோட்டார் அல்லாத காப்பீட்டு கோரிக்கைகளுக்காக 012-9271686 அல்லது 017-3283543 என்ற எண்ணையும், மோட்டார் கோரிக்கைகளுக்காக 1800-888-788 என்ற இலவச இலக்கத்தையும் அழைக்குமாறு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், Etiqa நிறுவனம் தனது அறிக்கையில், பாதிக்கப்பட்ட நுகர்வோரின் இன்சூரன்ஸ் கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்த, காவல்துறை அறிக்கை தேவையில்லையென அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கொள்கையாளர்கள் Etiqa Special Hotline – Putra Heights Explosion Claims மூலம் 011-16306646 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அல்லது 03-2692 8188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
-வீரா இளங்கோவன்