Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

கொரியா ஓபன்: சுன் ஹுவாட்-ஷேவோன் ஜோடி சுலப வெற்றி; காலிறுதிக்கு முன்னேற்றம்

படம்: ஆஸ்ட்ரோ

சோல், 25 செப். – மலேசியாவின் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் ஜோடி சுன் ஹுவாட்-ஷேவோன், கொரியா ஓபன் தொடரில் சீனாவின் வலுவான ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

இரண்டாம் சுற்றுப் போட்டியில் மலேசிய ஜோடி வெறும் 32 நிமிடங்களில் 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியைப் பெற்றது. தொடக்கம் முதலே தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள், எதிரணிக்கு வாய்ப்பே தரவில்லை.

இந்த வெற்றி, மலேசிய ஜோடியின் ஆட்டத் தரத்தை மட்டுமல்லாது, அடுத்த கட்டப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. ரசிகர்கள் அவர்களின் தொடர்ந்து நிலைத்திருக்கும் ஆட்டத்துக்கு உற்சாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

வரும் காலிறுதிப் போட்டியில் சுன் ஹுவாட்-ஷேவோன் ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர். இந்தப் போட்டி அவர்களின் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் பெரிய சவாலாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top