
கோலாலம்பூர், 30 ஏப்ரல் 2025 –மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் வண்ணம், ஏப்ரல் 26, 2025 அன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ளப் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆசியா கல்லூரியில் (BAC) நடைபெற்ற அப்-குளோஸ் என் பர்சனல் வித் அனுராதா ஸ்ரீராம் என்றப் பிரத்தியேக இசை நிகழ்ச்சியின் மூலம் அவர்களை மகிழ்வித்தது.
வாடிக்கையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ஆஸ்ட்ரோ ஊழியர்கள் உட்படப் புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராமின் 300-க்கும் மேற்பட்ட இரசிகர்களுக்கு அவரது அற்புதமான இசை மழையில் நனைய ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டது. ராகா அறிவிப்பாளர் அகிலாவால் தொகுத்து வழங்கப்பட்ட இந்தத் தனித்துவமான நிகழ்ச்சி, கேள்வி பதில் அங்கம் மூலம் பல்துறைப் பாடகியுடன் இரசிகர்கள் நேரடியாக உரையாட ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கியது, இது அவர்களின் இசை அனுபவத்தை இன்னும் குறிப்பிடத்தக்கதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது.

அவரதுச் சொந்த ஹிட் பாடல்களில் ஒன்றான மலரோடு மலரிங்கு (பம்பாய்) பாடலின் தொடக்கப் படைப்புடன் இந்த இசை நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கரு கரு கருப்பாயி (ஏழையின் சிரிப்பில்), ஓ போடு (ஜெமினி), ஒரு நாள் ஒரு கனவு (கண்ணுக்குள் நிலவு), கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு (வெற்றிக் கொடி கட்டு), லேசா லேசா (லேசா லேசா), அன்பென்ற மழையிலே (மின்சார கனவு) மற்றும் தனதுப் பல பிரபலமானப் பாடல்களை அனுராதா ஸ்ரீராம் பாடி அசத்தியதால் இரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ரோஜா பூந்தோட்டம் (கண்ணுக்குள் நிலவு), காட்டுச் சிறுக்கி (ராவணன்) மற்றும் உயிரே என் உயிரே (தொட்டி ஜெயா) போன்ற 2000-ஆம் ஆண்டு ஹிட் பாடல்களை அரங்கேற்றிய மைக்கல் ராவ், திவ்யா சந்திரன் மற்றும் மூர்த்தி போன்றப் புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளர்களின் கண்கவர் படைப்புகள் இரசிகர்களை ஈர்த்தனர்.

அப்-குளோஸ் என் பர்சனல் வித் அனுராதா ஸ்ரீராம் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ மற்றும் ராக்கெட்ஃப்யூல் இணைந்து வழங்கினர். மேலும் தாமரை ஜுவல்ஸ், கண்ணா சிக்னேச்சர் யூனி செக்ஸ் சலூன் மற்றும் டாஸ்லி மலேசியா ஆகியவை டி’எவர்லாஸ்டிங் நாட், மாயா குரூப் ஆஃப் ரெஸ்டாரன்ட்ஸ், லக்சரி மிட்டாய் ரிசோர்சஸ், வின்பிக்ஸ் போட்டோ பூத், பெசிக் ஸ்ட்ரீம்ஸ், நிஜா டிலைட்ஸ் ஸ்டுடியோ மற்றும் பிரிண்ட் அல்கெமி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இணை நிதியுதவிச் செய்து வழங்கினர். கூடுதலாக, இந்த இசை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ மின்னியல் கூட்டாளராக ஆஸ்ட்ரோ உலகமும் அதிகாரப்பூர்வ வானொலி கூட்டாளராக ராகாவும் திகழ்ந்தனர்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
-வீரா இளங்கோவன்