
கோலாலம்பூர், 19-ஜனவரி, பத்துமலை திருத்தலத்தில் இன்று இந்திய கலாச்சார மையம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இணைந்து கலாச்சார மையத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.
இந்த மையத்தில் இந்திய பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் மிருதங்கம், வயிலின், தபேலா போன்ற பாரம்பரிய இசைக் கருவிகள் சிறப்பிடமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தெய்வ சிலைகள், பாரம்பரிய ஓவியங்கள் ஆகியவை மையத்தின் சிறப்பாக விளங்குகின்றன.
இந்திய கலாச்சாரத்தை சிறப்பிக்கவும், பத்துமலையை பாரம்பரிய நெஞ்சமாக காட்சிப்படுத்தவும் உதவிய அனைத்து திட்டம் அமைப்புகளுக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், டத்தோ சுரேஷ், நாராயணசாமி, செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன் மற்றும் ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.