
கோலாலம்பூர், 31 ஜனவரி — முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அனைவரைப் போலவே அனைத்து வாய்ப்புகளுக்கும் தகுதியானவர் என மலேசிய ஊழல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜாய்ஸ் அப்துல் கரிம் தெரிவித்தார்.
நஜிப்பின் சிறைத் தண்டனை தொடர்பாக அவர் கூறியதாவது:
“நஜிப் ரசாக் தனது தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய ஒரு வாய்ப்பு பெற வேண்டும். குறிப்பாக, அவர் மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு தொடர்பாக தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் பிரதமரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான செயல்முறையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்.”
நஜிப்புக்கு சம உரிமை
நஜிப்புக்கு மற்றவர்களுக்கேற்ப தேவையான அதே வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் உறுதியுடன் இருப்பதை அரசு உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மலேசிய அரசியலமைப்பில் உள்ள சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும், மாட்சிமை தங்கிய மன்னரின் எந்த முடிவுகளும் மரியாதை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
நஜிப்பின் பங்களிப்பு மறுக்க முடியாது
முன்னாள் பிரதமராக நஜிப் ரசாக் வழங்கிய முக்கிய பங்களிப்புகளையும், அவரது அளவுகோலற்ற சேவைகளையும் மறுப்பது தவறாக இருக்கும் என்றும் ஜாய்ஸ் அப்துல் கரிம் தெரிவித்தார்.
-யாழினி வீரா