Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

“அச்சமில்லை அச்சமில்லை” – புதிய தமிழ் விவாத நிகழ்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

மலேசியத் தமிழர்களை சிந்திக்கச் செய்யும் புதியதொரு விவாத நிகழ்ச்சி, “அச்சமில்லை அச்சமில்லை”, எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் சேனல் 202, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகிய தளங்களில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

இத்தொடர், திருமண வாழ்க்கை, பிள்ளைகளின் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக ஊடகங்களின் தாக்கம் போன்ற உண்மை வாழ்க்கை சார்ந்த தலைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவேகமான அணுகுமுறையை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, சமூக மாற்றத்திற்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வலிமையான தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, இந்தியாவின் முன்னணி நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான கௌதமி அவர்களே தொகுத்து வழங்குகிறார். பொதுமக்கள், உள்ளூர் கலைஞர்கள் என இரு தரப்பினரும் விவாதக் குழுக்களாக கலந்துகொண்டு கருத்துகளை பகிர்ந்துகொள்வார்கள். மேலும்நிபுணர்களின் ஆய்வுகளும், நேரடி அனுபவங்களும் நிகழ்ச்சியின் உண்மைத்தன்மையை அதிகரிக்கின்றன.

லெவிஸ்டா நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளராக இருக்க, தாமரை ஜூவல்ஸ், ராஜி சில்க் பேலஸ், ஜோதி இம்பெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணை ஆதரவாளர்களாக இணைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு www.astro.com.my இணையதளத்தை பார்வையிடலாம்.
“அச்சமில்லை அச்சமில்லை” – நம் சமூகத்தின் மாற்றத்திற்கு ஆரம்ப புள்ளி!

Scroll to Top