
டோமினிக்கன், 9 ஏப்ரல்: டோமினிக்கன் குடியரசின் தலைநகரான சென்டோ டோமிங்கோவில் உள்ள Jet Set இரவுநேர விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 66 பேர் உயிரிழந்தனர். இதில், நாட்டின் பிரபல பாடகர், ஆளுநர் மற்றும் முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் சம்பவத்தால் 155 பேர் காயமுற்றனர். அவசரகால மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள்ளிருந்து சிக்கியுள்ளவர்களை மீட்க போராடி வருகின்றனர். மேலும், மீட்பு நடவடிக்கைகளை விரிவாக்க பல கனமான சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கூரை இடிந்த போது விடுதியில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் கிட்டத்தட்ட அனைத்து வர்க்கங்களையும் பாதித்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டும், காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் இருக்கின்றனர்.
-இளவரசி புவனஷங்கரன்