
Picture : Bernama
கோலாலம்பூர், செப்டம்பர் 30 : Bahasa Melayu மற்றும் History போன்ற முக்கிய பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்க, உயர் கல்வி அமைச்சகம் (MOHE) கல்வி அமைச்சகத்துடன் (MOE) கலந்துரையாட வேண்டும் என்று பிரதமர் ‘Datuk Seri Anwar Ibrahim’ அறிவுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், இக்கட்டளை இன்று உயர் கல்வி அமைச்சர் ‘Datuk Seri Dr Zambry Abd kadir சமர்ப்பித்த பொதுக் கல்வி பாடங்கள் (MPU) மறுஆய்வு முன்மொழிவின் ஒரு பகுதியாகும்.
‘Anwar’ தெரிவித்ததாவது, இந்த மறுஆய்வு MPU பாடங்களின் உள்ளடக்கம், அளவு மற்றும் கற்பித்தல் முறையை மேம்படுத்துவதற்கான முக்கியமான முயற்சி ஆகும். இதனால் பாடங்கள் புதுமையானதும், பொருத்தமானதும், தேசிய மதிப்புகளையும் தேசபக்தியையும் வளர்க்கக்கூடியதாகவும் அமையும்.
இந்த முன்மொழிவு பல தரப்புகளுடன் கலந்துரையாடலின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அறிஞர்கள், பொது பல்கலைக்கழகங்கள், மலேசிய தகுதிச் சான்றிதழ் முகமை (MQA), உயர் கல்வித் தலைமைத்துவ ‘Academy’ (AKEPT), மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
‘Anwar’ மேலும் தெரிவித்ததாவது, MPU மறுஆய்வு செயல்படுத்தப்படும் போது அது அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்து பயிற்சி நிறுவனங்களுக்கும் விரிவாக்கப்படும்.
இந்த முன்மொழிவு விரைவில் அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்படும். இதன் நோக்கம், நாட்டின் விழிப்புணர்வை மேம்படுத்தி, அறிவும், பெரிய மனமும், தேசப்பற்று உணர்வும் கொண்ட தலைமுறையை உருவாக்குவதாகும்.



