Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மறைந்த செய்ன் ரய்யான் வழக்கு: பெற்றோர்களுக்கு எதிரான விசாரணையில் 142 புகைப்படங்கள் ஆதாரமாக தாக்கல்

Picture: Google

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — மறைந்த ஆட்டிசம் பாதித்த சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதீன் வழக்கில், சம்பவம் தொடர்பான 142 புகைப்படங்கள் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், குழந்தை டயப்பர் அணிந்திருக்கும் படங்கள் மற்றும் அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், தனிப்பட்ட பொருட்கள் ஆகியவை அடங்கும்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையின் புகைப்பட நிபுணர் டெடக்டிவ் கார்ப்பரல் மொஹமட் ஹிர்வான் அரிபின் (45) இந்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார். பொதுமக்கள் குற்றவியல் வழக்கறிஞர் கமருல் இமான் அஹ்மத் சபியான், புகைப்படங்களை தாக்கல் செய்யும் போது, குற்றச்சாட்டுக்கு உட்பட்ட பெற்றோர்கள், சைம் இக்வான் ஜகரி மற்றும் அவரது மனைவி இஸ்மானிரா அப்துல் மனாஃப், நீதிமன்றத்தில் கதறி அழுவதை காணமுடிந்தது.

மொஹமட் ஹிர்வான் தனது சாட்சியத்தில், கடந்த டிசம்பர் 7, 2023 அன்று, சுங்காய் பலோ மருத்துவமனையில் சிறுவனின் பிரேத பரிசோதனைக்கு புகைப்படங்களை எடுத்ததாக தெரிவித்தார். இது கோட்டா டாமன்சாராவில் பதிவான மாயமானவர் குறித்த காவல் நிலைய புகாருடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார். மேலும், டிசம்பர் 8, 2023 அன்று, காவல்துறையினர் இடம் பார்வையிட்ட போது, அபார்ட்மெண்ட் இடாமான், டாமான்சாரா டாமாய் ஆகிய இடங்களில் சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படங்களை பதிவு செய்ததாக தெரிவித்தார்.

ஜெய்ன் ரய்யான் கடந்த டிசம்பர் 5 அன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள், அவரது உடல் வீட்டிற்கு அருகே உள்ள ஓடையில் காணப்பட்டது. விசாரணையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

2023 ஜூன் 13 அன்று, 30 வயதுடைய சைம் இக்வான் மற்றும் இஸ்மானிரா, தங்கள் ஆறு வயது மகனை அலட்சியமாக கைவிட்ட குற்றச்சாட்டை மறுத்தனர். அவர்களுக்கு சிறையில் 20 ஆண்டு தண்டனை அல்லது அதிகபட்சம் RM50,000 அபராதம் விதிக்கலாம்.

முறையீட்டாளர்கள், தங்கள் மீது பதிவான குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரி ஜனவரி 21 அன்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணை நாளை தொடரும்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top