Tazhal Media – தழல் மீடியா

/ Mar 26, 2025
Latest News
tms

‘ரெட்ரோ’ ஸ்பெஷல்- 15 நிமிட சிங்கிள் ஷாட்!

படம் : இந்தியா க்லிட்ஸ்

கோடம்பாக்கம், 25 மார்ச்- ‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு.

‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது. இப்பாடலை ஒட்டி 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. ‘கனிமா’ பாடலைத் தொடர்ந்து சண்டைக் காட்சி, அதனைத் தொடர்ந்து ஒரு காட்சி என 15 நிமிடத்துக்கு ஒரே டேக்கில் எடுத்து அசத்தியிருக்கின்றனர்.

இக்காட்சிக்காக அனைத்து நடிகர்களும் பங்கெடுத்து ஒத்திகைப் பார்த்து, இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். திங்கட்கிழமை தோறும் படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. இதில் இன்று இந்த 15 நிமிடக் காட்சி குறித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதே போன்று ‘வீர தீர சூரன்’ படத்திலும் 16 நிமிட காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளிவரவிருக்கிறது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இதில் பணிபுரிந்து வருகிறார்.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top