Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

நம்பிக்கையை துரோகம் செய்த மேலாளர் – 5.7 மில்லியன் மதிப்புள்ள தங்கம் மற்றும் நகைகள் கொள்ளை!

கோலாலம்பூர், அக் 29 – பவுன் கடை கொள்ளைச் சம்பவத்தில், அங்குப் பணியாற்றிய மேலாளர் தான் பிரதான திட்டமிடுபவர் என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்தது. கடையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் ரத்தினங்கள் சுமார் RM5.7 மில்லியன் மதிப்புடையவை என்று கூறப்படுகிறது. ஆரம்ப விசாரணையில், அந்த மேலாளர் தனது நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு நபர்கள் சிலருடன் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை தீட்டியதாக தெரியவந்தது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், குறித்த மேலாளர் உட்பட மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த நபர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் தெரிவித்ததாவது, “17 ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர், உள்துறை தகவல்களைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவத்தை சீராக திட்டமிட்டுள்ளார்” எனவும் கூறினர்.

விசாரணை தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 395 கீழ் நடைபெற்று வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் கைது செய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

-யாழினி வீரா

Scroll to Top