
கேரிக், 20-ஜனவரி,– கேரிக்-ஜேலி இடையே உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (JRTB) சனிக்கிழமை வெள்ளை நிற Perodua Bezza காரை சுற்றி யானைகள் குழு தாக்கியது என நம்பப்படும் சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை என கேரிக் போலீஸ் தலைமை அதிகாரி சுப்ரீடண்ட் ஜுல்கிப்லி மக்மூத் தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவத்தின் துல்லியமான இடம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
“வன உயிரினங்கள் அருகில் இருந்தால், வாகன பயணிகள் யானைகளுடன் மோதலைத் தவிர்க்கவும், பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் வேண்டும். யானைகளை சந்திக்கும் போது, வாகனத்தை நிறுத்தவும், யானைகள் செல்ல அனுமதிக்கவும், ஹாரன் அடிக்க வேண்டாம், உயர் ஒளியூட்டிகளை (ஹை-பீம் லைட்ஸ்) பயன்படுத்த வேண்டாம், மற்றும் யானைகளைத் தூண்டக்கூடிய எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
சுமார் 1 நிமிடம் 21 விநாடிகள் நீளமான வீடியோவை அப்துல் ரஹ்மான் என்பவர் டிக் டாக்கில் பகிர்ந்திருந்தார், அது 1.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் யானைகள் குழு ஒரு காரை அணுகி குலுக்கி சேதப்படுத்தும் தீவிரமான சூழல் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவரின் டாஷ் கேமரிலிருந்து பதிவு செய்யப்பட்ட மற்றொரு வீடியோவும் டிக் டாக்கில் வைரலானது, அதில் யானைகள் காரை சுற்றி நெருங்கும் பயங்கர தருணங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.
-வீரா இளங்கோவன்