
படம் : கூகுள்
13 ஏப்ரல்- முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.
நீச்சத்தண்ணி என்றால், பழைய சோற்றுத் தண்ணீர், நீராகாரம் என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
சில வருடங்களுக்கு முன், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவமனை சார்பாக பழைய சோற்றின் மருத்துவப் பயன் குறித்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டு, அவை உறுதிசெய்யப்பட்டன. விளைவாக, இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட தொடங்கியுள்ளது.
-ஶ்ரீஷா கங்காதரன்