Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘ASEAN’ உச்சி மாநாட்டுக்கான பாதுகாப்பு 13,000-க்கும் மேற்பட்ட போலீசார் பணி

Picture: Awani

வரவிருக்கும் ASEAN உச்சி மாநாட்டை முன்னிட்டு, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய 13,000-க்கும் மேற்பட்ட ‘Polis (PDRM)’ மற்றும் குடிவரவு துறை (JIM) உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். மாநாட்டின் சீரான நடைபெறுதலும், விருந்தினர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பும் முதன்மையாகக் கருதப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த உச்சிமாநாடு நடைபெறும் நாட்களில் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு, விமான நிலையங்கள், முக்கியச் சாலைகள்,Hotel-கள் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு போக்குவரத்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் ஒத்துழைத்து, போக்குவரத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு ‘Polis’ கேட்டுக்கொண்டுள்ளனர். மாநாடு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு சோதனை வலுப்படுத்தப்படும் என்றும், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

PDRM தெரிவித்ததாவது, இது நாட்டின் சர்வதேச மரியாதையை உயர்த்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். எனவே, அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, எந்த வித சிக்கலும் இல்லாமல் மாநாடு வெற்றிகரமாக முடிவடைய வேண்டும்.

ASEAN உச்சிமாநாட்டின் வெற்றிகரமான நடைபெறுதல் மலேசியாவின் பாதுகாப்பு திறனை மட்டுமின்றி, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலும் நாட்டின் நல்ல பெயரை நிலைநிறுத்தும் என வலியுறுத்தப்பட்டது.

Scroll to Top