
பத்துமலை, 11 பிப்ரவரி — மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் மு. சரவணன் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள் பேரவைத் தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா, ம.இ.கா. சிலாங்கூர் மாநில கலை கலாச்சார பிரிவின் பெருமையான படைப்பாக உருவாக்கப்பட்ட “வேலவா வடிவேலவா” பக்திப் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இந்த பக்திப் பாடலில் பத்து கலைஞர்களுக்கும் அதிகமானோர் இணைந்து பாடியுள்ளார்கள். நாட்டின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான அமிகோஸ் அப்பு, இந்த பாடலுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி, அதன் எழுத்து பணியையும் மேற்கொண்டுள்ளார். பாடலின் காட்சிகளை அமிகோஸ் சுகு திறமையாக தயாரித்துள்ளார்.
இந்த பக்தி பாடலை MG விஜய், சுரேந்திரன் PPP, காந்திதாசன், வளர்மதி, ஈப்போ குணா, ராஜீ, உதயா, அமிகோஸ் சுகு, அமிகோஸ் அப்பு, தனம் ஆகியோர் பாடியுள்ளனர்.
மேலும், இந்த பக்திப் பாடலின் காணோளியில் Vhi Vhi Brothers Vhireshan, Vhishodan, MGR விஜய சேகர், மாலதி தங்கவேலு, GPK, Ipoh Guna, Arjun Sai ஜெகர்லமுடி, Ampang சேகர், காந்திதாசன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் டத்தோ ஸ்ரீ டாக்டர் மு. சரவணன், டத்தோ சிவகுமார் நடராஜா, மாநில MIC தலைவர் திரு சங்கர் ராஜ் ஐயங்கார், மாநில துணைத் தலைவர் திரு ஸ்ரீதரன் ரங்கநாதன், மற்றும் MIC தொகுதி தலைவர்கள், கிளைத் தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்த விழாவின் நிறைவில், சிலாங்கூர் மாநில MIC கலைக் கலாச்சார பிரிவு தலைவர் MG விஜய், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், குறிப்பாக கலைஞர்கள், பாடகர்கள், காணொளியில் நடித்தோர், மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
“வேலவா வடிவேலவா” பக்திப் பாடல் தமிழர் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான படைப்பாக, பக்தர்களின் இதயங்களை கொள்ளையடிக்க தயாராக உள்ளது!
-வீரா இளங்கோவன்