Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

‘ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் 2’-இல் இருந்து சிலாங்கூர் வெளியேற்றம்

கோலாலம்பூர், 7 நவ. – இந்தியோனியாவின் Persib Bandung அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், சிலாங்கூர் எஃப்.சி. அணி ‘ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் 2’ போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

போட்டியின் முதல் பாதியில் சிலாங்கூர் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி, எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆரம்பத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், இரண்டாம் பாதியில் Persib Bandung அணி அதிரடியான முறையில் மீண்டு, தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து வெற்றியை தட்டிச் சென்றது.

இந்த தோல்வியால் சிலாங்கூர் அணி தங்கள் குழுவில் எந்தப் புள்ளியும் பெற முடியாமல் கடைசி இடத்தில் தள்ளப்பட்டது. இதன்மூலம் அவர்கள் அடுத்த கட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்.

போட்டிக்குப் பின் பேசிய சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர், வீரர்கள் முழு திறமையுடன் விளையாடியதாகவும், ஆனால் பாதுகாப்பு பிழைகள் காரணமாக வெற்றி கைமாறியதாகவும் தெரிவித்தார். மேலும், அடுத்த சீசனில் அணி வலுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதுவரை சிலாங்கூர் அணியின் வெளிநாட்டு விளையாட்டு திறமைகள் குறித்து ரசிகர்கள் பல்வேறு எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் அணியின் உழைப்பை பாராட்டியுள்ளதுடன், சிலர் பாதுகாப்பு பிரிவை விமர்சித்துள்ளனர்.

இத்தோல்வி, மலேசிய கால்பந்தாட்டத்தில் வெளிநாட்டு போட்டிகளுக்கான தயாரிப்பில் புதிய மாற்றங்கள் தேவை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

– யாழினி வீரா

Scroll to Top