Tazhal Media – தழல் மீடியா

/ Jul 22, 2026
Latest News
tms

‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

கோலாலம்பூர், 07 நவ. – முன்னாள் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், பொதுவாக ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ என அறியப்படும் இவர் மீண்டும் சட்டப்பிரச்சினையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில், கடமையில் இருந்த போலீஸ் அதிகாரியின் பணியை தடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தச் சம்பவம் ஜாலான் இப்போ பகுதியில் இரவு நேரத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு வெளிநாட்டுப் பிரஜை வாகனம் ஓட்டியபோது, போக்குவரத்து போலீசார் வழக்கமான சோதனையை நடத்தினர். அந்தச் சமயத்தில் ஷீலா திடீரென தலையிட்டு, அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்க முயன்றதாகவும், கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், போலீசார் விரிவான விசாரணை தொடங்கியுள்ளனர். ஷீலா மீது போலீஸ் கடமையைத் தடுக்கும் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாகவும், இவர்மீது பல்வேறு ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. அதனால், அவர் சிலகாலம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் இப்படியான குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், போலீஸ் துறையில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

சட்ட ஒழுங்கை மீறும் எந்த நபருக்கும் சலுகை வழங்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது நலனுக்காகவும், போலீஸ் துறையின் மதிப்பை காப்பதற்காகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top