
படம் : கூகுள்
ஆந்திரா, 14 பிப்ரவரி- பிரபாஸ் நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனுபம் கெர். ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அனுபம் கெர்.
பிரபாஸ் உடன் நடிப்பது குறித்து, “இந்திய சினிமாவின் பாகுபலியுடன் எனது 544-வது பெயரிடப்படாத படத்தில் இணைந்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே ஒரு பிரபாஸ், நம்ப முடியாத திறமை மிக்க ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அற்புதமான குழுவினரால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனது அருமை நண்பரும், புத்திசாலி ஒளிப்பதிவாளரான சுதீப் சாட்டர்ஜி தான் இதில் பணியாற்றுகிறார்.
‘இது ஒரு அற்புதமான கதை. வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? நண்பர்களே! வெற்றி பெறுவோம்! ஜெய் ஹோ!” என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் அனுபம் கெர். பிரபாஸ் – ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி இணைப்பில் உருவாகும் முதல் படம் இது.
1940-களில் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த வரலாற்று புனைவு கதை. உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறக்கப்பட்ட உண்மைகளுக்கும் ஒரே தீர்வு என்று நம்பிய சமூகத்திலிருந்து, அதன் நிழல்களிலிருந்து எழுந்த ஒரு போர் வீரனின் கதை தான் இப்படம். இதில் பிரபாஸுக்கு நாயகியாக இமான்வி நடித்து வருகிறார். மேலும் மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
-ஶ்ரீஷா கங்காதரன்